/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆனேக்கல் கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்
/
ஆனேக்கல் கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமல்
ADDED : மார் 09, 2025 11:34 PM

பெங்களூரு: ஆனேக்கல்லின் பல்வேறு கோவில்களில், ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பல்வேறு கோவில்களில், ஏற்கனவே பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ளது. நாகரிக உடைகள் அணிந்து வருவதால், பக்தர்களின் கவனம் சிதறுகிறது. இதை மனதில் கொண்டு, கோவில்களில் இந்த விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.
தற்போது பெங்களூரு ரூரல், ஆனேக்கல்லின் ஹெப்பகோடியில் உள்ள பிரசித்தி பெற்ற பட்டாலம்மா, கோதண்ட ராமர் கோவில், கிராம தேவதை ஓனம்மா, சர்வ சித்தி மஹா கணபதி கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்கர்ட், மிடி, ஸ்லீவ்லெஸ் உடைகள், ஜீன்ஸ் பேன்ட், ஷார்ட்ஸ் அணிந்து கோவிலுக்கு வர கூடாது.
பெண்கள் சேலை அல்லது சூடிதார், ஆண்கள் வேட்டி, சட்டை, அல்லது சாதாரண பேன்ட் சட்டை அணிந்து வர வேண்டும்.
இது தொடர்பாக, அந்தந்த கோவில்களின் முன்பாக, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
கோவிலின் புனிதம், கலாசாரம், பாரம்பரியம், ஒழுங்கை காப்பாற்றும் நோக்கில், இத்தகைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதை கடைப்பிடிக்கும்படி கோவில் நிர்வாக கமிட்டிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளன.