/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிரைவர் இல்லாத மெட்ரோ இன்று சோதனை ஓட்டம்
/
டிரைவர் இல்லாத மெட்ரோ இன்று சோதனை ஓட்டம்
ADDED : பிப் 23, 2025 11:07 PM
பெங்களூரு: லோகோ பைலட் இல்லாத மெட்ரோ ரயில்களின் சோதனை ஓட்டம் இன்று நடக்க உள்ளது.
பெங்களூரு நம்ம மெட்ரோவின் மஞ்சள் வழித்தட பாதைகள் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த மஞ்சள் வழித்தடம் ஆர்.வி., சாலை - எலக்ட்ரானிக் சிட்டி பாதை வழியாக பொம்மசந்திரா வரை செல்கிறது. அடுத்த மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிவடைந்து, ஏப்ரலில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, சீனாவில் இருந்து லோகோ பைலட் இல்லாத மெட்ரோ ரயில் ஒன்று பெங்களூருக்கு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லோகோ பைலட் இல்லாத மெட்ரோ ரயிலும் கொண்டு வரப்பட்டது.
இந்த இரண்டு ரயில்களும் மஞ்சள் வழித்தடத்தில் சோதனைக்காக தயாராக உள்ளன. இந்த ரயில்களை இன்று மெட்ரோ பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்கிறார். மேலும், இந்த இரண்டு ரயில்களின் சோதனை ஓட்டமும் நடக்க உள்ளது.
இந்த மெட்ரோ ரயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது,
மெட்ரோ ரயில்களை மறுபரிசீலனை செய்வது குறித்து ரயல்வே வாரியத்திடம் ஆவணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஆவணங்கள் இன்று ஆய்வு செய்யப்படும். அடுத்த மாத இறுதிக்குள் மஞ்சள் வழித்தடத்தில் முழுமையான ஆய்வுகள் செய்யப்பட உள்ளன.
வரும் 28 ம் தேதி, ஏ.டி.சி., என்ற ஆளில்லா ரயிலின் மேம்பட்ட தொழில் நுட்பத்தை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.டி.எஸ்.ஓ., எனும் அமைப்பு கடந்த மாதம் 21 ம் தேதி, லோகோ பைலட் இல்லாத ரயில்கள் இயங்குவதற்கு அனுமதி அளித்தது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

