தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆர்.ஆர்.நகரில் குஸ்மா ரொம்ப சுறுசுறுப்பு!

 ஆர்.ஆர்.நகரில் குஸ்மா ரொம்ப சுறுசுறுப்பு!

 ஆர்.ஆர்.நகரில் குஸ்மா ரொம்ப சுறுசுறுப்பு!


ADDED : செப் 22, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 08:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: அடுத்த சட்டசபை தேர்தலை கருதி, ஆர்.ஆர்.நகர் தொகுதியில் காங்கிரசின் குஸ்மா, ரொம்ப சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

பெங்களூரில் உள்ள மிகப்பெரிய சட்டசபை தொகுதிகளில் ஆர்.ஆர்.நகரும் ஒன்று. இத்தொகுதியில் பா.ஜ.,வின் முனிரத்னா தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கடந்த, 2013, 2018ல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அவர், 2019ல் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்து, இடைத்தேர்தலில் வென்றார். 2023 தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றார்.

இந்நிலையில், முனிரத்னா மீது பலாத்கார வழக்குகள், வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகள் உள்ளன. இதனால், 2028 சட்டசபை தேர்தலில் பா.ஜ., மேலிடம் அவருக்கு 'சீட்' வழங்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. முனிரத்னாவுக்கு சீட் கிடைக்காமல் போனால், அது காங்கிரசுக்கு பிளஸ் பாயின்டாக மாற வாய்ப்பு உள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் வகையில், காங்கிரசின் குஸ்மா, ஆர்.ஆர்.நகர் தொகுதியில் தீவிரமாக கள பணியாற்றுகிறார். தொகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்னைகளை கேட்பது; விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்பது; சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

இவருக்கு முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் ஆதரவும் உள்ளது.

கடந்த, 2020 இடைத்தேர்தலில் முனிரத்னாவை எதிர்த்து, குஸ்மா போட்டியிட்டார். அப்போது அவர், 58ஆயிரத்து 113 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். ஆனால், 2023 தேர்தலில், வெறும் 11ஆயிரத்து 842 ஓட்டுகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார். இதனால், 2028 தேர்தலில் தனது வெற்றி உறுதி என்று, ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us