'விளம்பரங்கள் மூலம் மீண்டும் முதல்வராக சிவகுமார் திட்டம்'
'விளம்பரங்கள் மூலம் மீண்டும் முதல்வராக சிவகுமார் திட்டம்'
ADDED : செப் 22, 2026 08:54 PM

பெங்களூரு: ''வெற்று விளம்பரங்கள் மூலம் மீண்டும் முதல்வராக சிவகுமார் திட்டமிடுகிறார்,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
ஒரு யூனிட் மின்சாரம் 10 ரூபாய் என்ற விலையில் இருந்த போது, காங்கிரஸ் அரசு முன்கூட்டியே ஏன் மின்சாரத்தை கொள்முதல் செய்யவில்லை. தற்போது, ஒரு யூனிட் மின்சாரம் 14 முதல் 15 ரூபாயில் உள்ளது. இந்த சமயத்தில் மின்சாரத்தை காங்., அரசு கொள்முதல் செய்கிறது. இது வேடிக்கையாக இருக்கிறது.
மங்களூருக்கு சமீபத்தில் பயணம் செய்த சிவகுமார், 35 ஆயிரம் கோடி ரூபாயிலான திட்டங்களை அறிவித்தார். இத்தனை திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பணம் எங்கே இருக்கிறது; ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து நிதி கிடைக்கும் என சிவகுமார் எதிர்பார்க்கிறாரா...
வெற்று விளம்பரங்கள் மூலம் மீண்டும் முதல்வராக சிவகுமார் திட்டமிடுகிறார். அவரது எண்ணம் நிறைவேறாது. மாநிலத்தில் போக்குவரத்து கழகங்கள் கடனில் தத்தளிக்கின்றன. பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.
பள்ளி சீருடைகள் கொள்முதல் செய்வதில் ஊழல் நடந்து உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, ஷூக்கள் ஒரு மாதத்திலேயே வீணாக
போகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
