தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'முதல்வர் சிவகுமாரை விட அமைச்சர் குமாரசாமி பணக்காரர்'

 'முதல்வர் சிவகுமாரை விட அமைச்சர் குமாரசாமி பணக்காரர்'

 'முதல்வர் சிவகுமாரை விட அமைச்சர் குமாரசாமி பணக்காரர்'


ADDED : செப் 22, 2026 08:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 08:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: ''முதல்வர் சிவகுமாரை விட, மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் நான்கு மடங்கு சொத்து உள்ளது,'' என, பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.

சித்ரதுர்காவில் அவர் அளித்த பேட்டி:

முதல்வர் சிவகுமார் சொத்து சேர்ப்பு ஒரு தனிப்பட்ட விஷயம். ஆனால், சிவகுமாரை விட, மத்திய அமைச்சர் குமாரசாமி, நான்கு மடங்கு சொத்துக்கு சொந்தக்காரர். குமாரசாமிக்கு விமான நிலைய சாலை, நெலமங்களா சாலையில் சொத்துகள் உள்ளன. இதை எங்கிருந்து பெற்றார்; இது குறித்து நாம் கேள்வி எழுப்பி உள்ளோமா?

குமாரசாமி, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து விட்டு தப்பியோடி விட்டார். ஆனால், மக்களின் ஆசிர்வாதத்தால், சிவகுமார் முதல்வராகி உள்ளார். சில தவிர்க்க முடியாத காரணத்தால், தற்செயலாக குமாரசாமி இரண்டு முறை முதல்வரானார். எனவே, அவரிடம் இருந்து சிவகுமார் பாடம் கற்க அவசியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us