தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசியல் பக்கம்

 அரசியல் பக்கம்

 அரசியல் பக்கம்


ADDED : செப் 22, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 08:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வலுவான நிலைப்பாடு

'வந்தே மாதரம்' பாடலில் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும். இதுவே, காங்கிரசின் நிலைப்பாடு. இதில் மாறுதல் கிடையாது. வந்தே மாதரம் சுதந்திர போராட்டத்தின் போது, மக்களை போராட திரட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. நாங்கள் தான் வந்தே மாதரத்தை நாட்டுக்கு வழங்கினோம். இந்த நாடு, அனைத்து தரப்பு மக்களுக்கும் சொந்தமானது என்பதே வந்தே மாதரம் உணர்த்துகிறது. இதில், எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

பொன்னையா, முதல்வரின் சட்ட ஆலோசகர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,

-------------

விவசாயிகள் பேரணி

விவசாயிகளுக்கு எதிரான காங்கிரஸ் அரசின் போக்கை கண்டித்து, விவசாயிகள் சுயமரியாதை பேரணி வரும் 28ம் தேதி ம.ஜ.த., சார்பில் நடத்தப்படும். இடம் பின்னர் அறிவிக்கப்படும். பேரணியில் விவசாயிகளுடன் விரிவான பேச்சு நடக்கும். அப்போது, அவர்களின் பிரச்னைகள் கேட்டு அறியப்படும். இதற்கு மத்திய அமைச்சர் குமாரசாமி தலைமை தாங்குவார். கஸ்துாரிரங்கன் அறிக்கையால் விவசாயிகள், மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நிகில், இளைஞரணி தலைவர், ம.ஜ.த.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us