தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'சுரேஷ்குமாரை சுத்தம் செய்ய ஒரு இயந்திரம் போதாது'

 'சுரேஷ்குமாரை சுத்தம் செய்ய ஒரு இயந்திரம் போதாது'

 'சுரேஷ்குமாரை சுத்தம் செய்ய ஒரு இயந்திரம் போதாது'


ADDED : செப் 22, 2026 08:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 08:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், பண்பாளர் போல வேடமிட்டுள்ள வில்லன். ஊழல் எனும் அழுக்கேறிய அவரை சுத்தம் செய்ய ஒரு இயந்திரம் போதாது,'' என, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, மாநில காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் பேசிய போது, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார், 'ஹரிபிரசாத்திற்கு அசிங்கமான வாய் இருக்கிறது' என விமர்சித்திருந்தார்.

அதற்கு பதிலளித்து, ஹரிபிரசாத் கூறியதாவது:

ஊழல் எனும் அழுக்கேறி சுற்றி திரிபவர் சுரேஷ் குமார். எகிப்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமான நியூடெல்டா ஆலையால் கூட, அவர் உடம்பில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த அழுக்கை கழுவ முடியாது.

சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எதிராக பா.ஜ., தொடுத்த தனிப்பட்ட தாக்குதல்களை சுரேஷ்குமார் கவனிக்கவில்லை போலிருக்கிறது.

முதல்வரின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மற்றும் கார்ப்பரேஷன் சார்பில், பல்வேறு பணிகளுக்கு அறிவிக்கப்பட்ட டெண்டர் விஷயத்தில், சுரேஷ்குமார் தேவையின்றி இடையூறு செய்தார். இதுதொடர்பாக லோக் ஆயுக்தாவில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us