/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலி, மகன் கொலை எலக்ட்ரீஷியனுக்கு 'ஆயுள்'
/
கள்ளக்காதலி, மகன் கொலை எலக்ட்ரீஷியனுக்கு 'ஆயுள்'
ADDED : மார் 10, 2025 12:30 AM

பெங்களூரு: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரா. இவரது மனைவி நவநீதா, 33. இத்தம்பதிக்கு சாய் அபிஷேக், 15, சாய் ஸ்ருஜன், 11 என்ற மகன்கள் இருந்தனர். பெங்களூரு பாகல்குன்டேயில் வசித்தனர்.
குடும்ப தகராறில் கணவரை பிரிந்த நவநீதா, இரு மகன்களுடன் தனியாக வசித்தார்; கால் சென்டரிலும் வேலை செய்தார்.
அங்கு எலக்ட்ரீஷியன் வேலை செய்த, கதக் மாவட்டத்தை சேர்ந்த சேகரப்பா, 30, என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. நவநீதா வீட்டிற்கு சேகரப்பா அடிக்கடி சென்றார்; இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர்.
இந்நிலையில் நவநீதா, வேறு ஒருவருடன் நெருங்கி பழகினார். இதை கள்ளக்காதலன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில், கடந்த 2023ம் ஆண்டு, செப்டம்பர் 4ம் தேதி நவநீதாவை கத்தியால் குத்தி, சேகரப்பா கொலை செய்தார்.
இந்த கொலையை நேரில் பார்த்த சாய் ஸ்ருஜனையும் கழுத்தை நெரித்து கொன்றார். பாகல்குன்டே போலீசார், சேகரப்பாவை கைது செய்தனர்.
வழக்கு, பெங்களூரு 51வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சந்தோஷ் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.
சேகரப்பா மீதான கொலை குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகி உள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக கூறினார். சேகரப்பா, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.