/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கப்பன் பூங்காவில் தனியார் ஆர்ட் கேலரி நடைபயிற்சியாளர்கள் சங்கம் எதிர்ப்பு
/
கப்பன் பூங்காவில் தனியார் ஆர்ட் கேலரி நடைபயிற்சியாளர்கள் சங்கம் எதிர்ப்பு
கப்பன் பூங்காவில் தனியார் ஆர்ட் கேலரி நடைபயிற்சியாளர்கள் சங்கம் எதிர்ப்பு
கப்பன் பூங்காவில் தனியார் ஆர்ட் கேலரி நடைபயிற்சியாளர்கள் சங்கம் எதிர்ப்பு
ADDED : மார் 04, 2025 05:01 AM

பெங்களூரு: கப்பன் பூங்காவில் தனியார் ஆர்ட் கேலரி கட்ட, ஐந்து ஏக்கர் நிலத்தை தொழிலதிபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரின் கப்பன் பூங்கா, பிரபலமான இடங்களில் ஒன்றாகும். தாவரங்கள், மரங்கள், பூச்செடிகள் நிறைந்த இடமாகும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கப்பன் பூங்காவில் நடைபயிற்சி செய்கின்றனர். பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையும் அதிகம்.
அரசு தலைமை செயலர் சாலினி ரஜ்னீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கப்பன் பூங்காவுக்கு இணைப்பு ஏற்படுத்தும் கஸ்துாரி பா சாலையை அழகாக்கவும், கப்பன் பூங்காவில் தனியார் ஆர்ட் கேலரி கட்ட, தொழிலதிபர் ஒருவருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் உமேஷ் கூறியதாவது:
கப்பன் பூங்கா 300 ஏக்கர் பரப்பளவு கொண்டிருந்தது. ஆனால் தற்போது 197 ஏக்கர் மட்டுமே மிச்சம் உள்ளது. மேம்பாடு என்ற பெயரில், பூங்கா நிலத்தை தனியாருக்கு மாநில அரசு குத்தகைக்கு அளிப்பது சரியல்ல. கப்பன் பூங்காவில் தனியார் ஆர்ட் கேலரி அமைக்க அனுமதி அளித்தால், நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
அரசு தலைமை செயலர் சாலினி ரஜனீஷ், தனியார் தொழிலதிபருக்கு, கப்பன் பூங்காவின் ஐந்து ஏக்கர் நிலத்தை கொடுக்க முன் வந்திருப்பதை, நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பூங்காவில் கட்டடம் கட்ட, சட்டத்தில் அனுமதியில்லை. ஆனால் சாலினி ரஜ்னீஷ், விதிகளை புறக்கணித்து, பூங்கா நிலத்தை தனியாருக்கு கொடுக்க தயாராகிறார்.
எந்த காரணத்தை கொண்டும், பூங்கா நிலத்தை தனியாருக்கு அளிக்கக் கூடாது. இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.