/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வர்த்திகா கட்டியார் மீது நடவடிக்கை தலைமை செயலருக்கு ரூபா கடிதம்
/
வர்த்திகா கட்டியார் மீது நடவடிக்கை தலைமை செயலருக்கு ரூபா கடிதம்
வர்த்திகா கட்டியார் மீது நடவடிக்கை தலைமை செயலருக்கு ரூபா கடிதம்
வர்த்திகா கட்டியார் மீது நடவடிக்கை தலைமை செயலருக்கு ரூபா கடிதம்
ADDED : மார் 06, 2025 12:20 AM

பெங்களூரு:'ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் வர்த்திகா கட்டியார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில தலைமைச் செயலர் ஷாலினிக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில் ஐ.ஜி.,யாக இருந்தவர் ஐ.பி.எஸ்., ரூபா. அதே பிரிவில் டி.ஐ.ஜி.,யாக பணியாற்றியவர் வர்த்திகா கட்டியார். தன் அலுவலகத்துக்குள் போலீஸ்காரர்களை அத்துமீறி நுழைய வைத்ததாக ரூபா மீது வர்த்திகா புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து வர்த்திகா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ரூபாவும் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். அவர், கர்நாடக பட்டு சந்தைப்படுத்துதல் வாரியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாநில தலைமைச் செயலர் ஷாலினிக்கு, ரூபா நேற்று எழுதிய கடிதம்:
என் மீது ஐ.பி.எஸ்., வர்த்திகா கட்டியார் சுமத்தி இருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. ஆதாரம் இல்லாமல் அபத்தமான பொய் பேசுகிறார்.
அவரது அறையில் இருந்து ஆவணங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. என்னுடைய அறைக்கும், அவரது அறைக்கும் இடையே 5 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.
வர்த்திகா கூறியது உண்மை என்றால், உள்நாட்டு பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வராதது ஏன்? என் மீது புகார் தெரிவித்து உங்களுக்கு எழுதிய கடிதத்தை, ஊடகங்களுக்கு கசிய விட்டுள்ளார்.
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்திகா 2010ம் ஆண்டு ஐ.பி.எஸ்., பேட்ச்சை சேர்ந்தவர்.
ஹைதராபாத்தில் பயிற்சியில் இருந்தபோது, கர்நாடக ஐ.பி.எஸ்., அதிகாரி விபுல்குமார் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். ஆனால் விபுல்குமார் நல்ல மனிதர். சிறந்த அதிகாரி. அவர் மீது அளித்த புகார், பொய் என்று தெரியவந்தது.
இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.