/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக லோக் ஆயுக்தா ஏ.டி.ஜி.பி., மீது லஞ்ச ஒழிப்பில் சமூக ஆர்வலர் புகார்
/
கர்நாடக லோக் ஆயுக்தா ஏ.டி.ஜி.பி., மீது லஞ்ச ஒழிப்பில் சமூக ஆர்வலர் புகார்
கர்நாடக லோக் ஆயுக்தா ஏ.டி.ஜி.பி., மீது லஞ்ச ஒழிப்பில் சமூக ஆர்வலர் புகார்
கர்நாடக லோக் ஆயுக்தா ஏ.டி.ஜி.பி., மீது லஞ்ச ஒழிப்பில் சமூக ஆர்வலர் புகார்
ADDED : மார் 12, 2025 11:52 PM

பெங்களூரு: 'முடா' வழக்கில் சித்தராமையாவுக்கு ஆதரவாக 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில், லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., மனீஷ் கர்பிகர் உட்பட 3 அதிகாரிகள் மீது, மத்திய லஞ்ச ஒழிப்புத்துறையில் சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா புகார் செய்துள்ளார்.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து, முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனை கிடைத்தது.
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக, மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா புகார் அளித்திருந்தார். புகாரை விசாரித்த, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் சித்தராமையா, பார்வதி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து 4 பேர் மீதும், மைசூரு லோக் ஆயுக்தா கடந்த ஆண்டு செப்டம்பரில் வழக்குப்பதிவு செய்தது. நீதிமன்றத்தில் கடந்த மாதம் 20ம் தேதி, லோக் ஆயுக்தா போலீசார் 'பி' அறிக்கை தாக்கல் செய்தனர்.
சித்தராமையா உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிநேகமயி கிருஷ்ணா நேற்று அளித்த புகார்:
'முடா' தொடர்பான விசாரணையில், அரசியல்வாதிகள் செல்வாக்கு செலுத்துவதால், லோக் ஆயுக்தா போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சித்தராமையா உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள் என்று, அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
லோக் ஆயுக்தா போலீசாருக்கு பொது அறிவு இல்லையா அல்லது அரசியல்வாதிகள் செல்வாக்கிற்கு அடிபணிந்து, தங்கள் அறிவுசார் திறன்களை ஊழல்வாதிகளிடம் ஒப்படைத்து விட்டார்களா என்று தெரியவில்லை. இத்தகைய அதிகாரிகள் ஐ.பி.எஸ்., ஆக தொடர்வது பொருத்தமானதா?
முதல்வர் குடும்பம் செய்த தவறுக்கு ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், பி அறிக்கை தாக்கல் செய்து இருக்கின்றனர்.
இதில் தவறு செய்த லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., மனீஷ் கர்பிகர், ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வரர் ராவ், மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.