ADDED : பிப் 28, 2025 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ஆட்டோ மீது பி.எம்.டி.சி., பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர், ஆட்டோவில் பயணம் செய்தவர் என, இருவர் உயிரிழந்தனர்.
பெங்களூரு, கே.பி., அக்ரஹாரவை சேர்ந்தவர் அனில் குமார், 50; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை தன் ஆட்டோவில் விஷ்ணு பாட், 80, என்பவரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
ஹோசகெரேஹள்ளி கிராஸ் பகுதியில் ஆட்டோ சென்றபோது, பின்புறம் வந்த பி.எம்.டி.சி., பஸ் ஆட்டோ மீது மோதியது. இதனால், ஆட்டோ முன்புறம் சென்ற பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அனில் குமார், ஆட்டோவில் பயணம் செய்த விஷ்ணு பாட் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பி.எம்.டி.சி., பஸ்சை பறிமுதல் செய்த போலீசார், பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.