/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்கள் பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள் முதல்வருக்கு விஜயேந்திரா கடிதம்
/
மக்கள் பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள் முதல்வருக்கு விஜயேந்திரா கடிதம்
மக்கள் பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள் முதல்வருக்கு விஜயேந்திரா கடிதம்
மக்கள் பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள் முதல்வருக்கு விஜயேந்திரா கடிதம்
ADDED : பிப் 25, 2025 10:43 PM

பெங்களூரு: மாநில பொருளாதார சூழ்நிலையை, மனதில் கொண்டு பொறுப்புடன் பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள்' என, முதல்வருக்கு கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் சித்தராமையாவுக்கு, விஜயேந்திரா எழுதிய கடிதம்:
பொருளாதார ஒழுங்குடன், பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள். எந்த அரசாக இருந்தாலும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடன் பெறுவது சகஜம் தான். ஆனால் இந்த கடனை முதலீடுகளுக்கு பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, வருவாய் பற்றாக்குறையுடன் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளீர்கள். நிதி ஒழுங்கு மற்றும் பட்ஜெட் விதிமுறையை மீறியுள்ளீர்கள்.
மக்களின் தேவைக்கு தகுந்தார் போன்று, பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள். பொருளாதார ஒழுங்குடன், பொறுப்புடன் பட்ஜெட் தயாரியுங்கள். மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி.,யின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தியதை, நீங்களே ஒப்பு கொண்டீர்கள்.
பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனம், வருவாய் உட்பட பல்வேறு துறைகள், 6,000 கோடி ரூபாய் பில் பாக்கி வைத்துள்ளதாக, மின்துறை அமைச்சர் ஜார்ஜ் கூறியுள்ளார். 15 முறை பட்ஜெட் தாக்கல் செய்த உங்களுக்கு, இது மதிப்பை தருமா.
இரண்டே ஆண்டில், கர்நாடக மக்கள் தலையில் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளீர்கள். இம்முறை பட்ஜெட்டில், இன்னும் எவ்வளவு சுமையை ஏற்றுவீர்களோ என, மக்கள் அஞ்சுகின்றனர். மத்திய அரசின் திட்டங்களுக்கு, மாநில அரசு தன் பங்கு நிதியை வழங்காவிட்டால், மத்திய அரசின் நிதியுதவியை இழக்க நேரிடும். ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், அரசிடம் பணம் இல்லை. உங்கள் அரசு ஏற்கனவே பால், பெட்ரோல், வரி உட்பட, அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதை பா.ஜ., கண்டிக்கிறது.
இம்முறை பட்ஜெட் தாக்கல் செய்வீர்களோ, இல்லையோ தெரியாது. ஆனால் மக்களின் நலன், வளர்ச்சி, மாநில பொருளாதார திடத்தை உறுதி செய்யும் வகையில், பட்ஜெட் தாக்கல் செய்ய, உங்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

