/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டவிரோதமாக வசித்த 10 வங்க தேசத்தவருக்கு தண்டனை
/
சட்டவிரோதமாக வசித்த 10 வங்க தேசத்தவருக்கு தண்டனை
சட்டவிரோதமாக வசித்த 10 வங்க தேசத்தவருக்கு தண்டனை
சட்டவிரோதமாக வசித்த 10 வங்க தேசத்தவருக்கு தண்டனை
ADDED : டிச 11, 2025 05:42 AM
உடுப்பி: சட்டவிரோதமாக வசித்து வந்த வங்க தேசத்தின் 10 இளைஞர்களுக்கு சிறை தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உடுப்பி மாவட்டம் மல்பே அருகில் உள்ள கிராமம் ஒன்றில் நடப்பாண்டு அக்டோபர் 11ல் வங்க தேசத்தினர் சட்டவிரோதமாக வசிப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மல்பே போலீசார் அங்கு சென்று, சோதனை நடத்தினர். முதலில் ஏழு பேரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான 10 பேரும் இளைஞர்கள். ஹகீம் அலி, சுஜோன், இஸ்மாயில், கரீம், சலாம், ராஜிகுல், சூஜித், ரிமோல் முகமது, இமாம் ஷேக், முகமது ஜகாங்கீர் ஆலம் ஆகியோரிடம் விசாரணையை முடித்த போலீசார், உடுப்பி நகரின் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் 10 பேரும் சட்டவிரோதமாக உடுப்பியில் வசிப்பது உறுதியானது. இவர்கள் இந்தியாவில் தங்க, அரசிடம் அனுமதி பெறவில்லை. போலியான ஆதார் கார்டு வைத்துள்ளனர்.
இவர்கள் குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம், 10 பேருக்கும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

