ADDED : செப் 17, 2026 11:13 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: கர்நாடக அரசு பஸ், சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், சாந்திபுரத்தில் இருந்து தங்கவயலுக்கு வந்து கொண்டிருந்த கர்நாடக அரசு பஸ்சில் 40 பயணியர் இருந்தனர்.
இந்த பஸ் கேசம்பள்ளி அருகே ராம்பூர் கிராமம் பகுதியில் வந்துகொண்டிருந்த போது, சாலையின் டிவைடரில் மோதியது. பஸ் தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த ஈச்ச மரத்தில் மோதி நின்றது.
இதனால், பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கின. பயணியர் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்தவர்களுக்கு ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
