தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கொதிக்கும் நீரில் விழுந்தவர் உயிரிழப்பு

 கொதிக்கும் நீரில் விழுந்தவர் உயிரிழப்பு

 கொதிக்கும் நீரில் விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : செப் 17, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: பாக்கு வேக வைக்கும் போது, அண்டாவுக்குள் தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.

ஷிவமொக்கா மாவட்டத்தின், வட்டினகொப்பா கிராமத்தில் வசித்தவர் ஜேனுகுமார், 40. இவர் செப்டம்பர் 8ம் தேதியன்று, தன் வீட்டின் அருகில் இருந்த ஷெட்டில், பெரிய அண்டாவில் பாக்கு வேக வைப்பதில் ஈடுபட்டிருந்தார்.

வெந்த பாக்குகளை வெளியே எடுப்பதற்காக, அண்டாவின் பக்கத்தில் இருந்த திண்ணை மீது ஏறினார்.

அப்போது கால் தவறி, கொதிக்கும் தண்ணீர் இருந்த அண்டாவுக்குள் விழுந்தார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, ஷிவமொக்காவின், மெக்கான் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலன் இன்றி, நேற்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து, ஷிவமொக்கா ஊரக போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us