10 லட்சம் கி.மீ., இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களை புதுப்பிக்க முடிவு
10 லட்சம் கி.மீ., இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களை புதுப்பிக்க முடிவு
ADDED : செப் 01, 2026 03:18 AM
பெங்களூரு: தொடர்ந்து, 10 லட்சம் கி.மீ., துாரம் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில்களை புதுப்பிக்க, பெங்களூரு மெ ட்ரோ நிறுவனம் முடிவு செய்து உள்ளது.
பெங்களூரில் மஞ்சள், பச்சை, ஊதா ஆகிய மூன்று வழித்தடங்களில் 96 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை துவங்கி 15 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. இதில், சில ரயில்கள் 10 லட்சம் கி.மீ., துாரம் இயக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில்களை மறுசீரமைக்க பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், ரயிலில் உள்ள மின்சார அமைப்பு, பிரேக், கதவு, சக்கரம், பயணியர் இருக்கை, பெட்டிகளின் உட்புறம், அவசரகால பாதுகாப்பு கருவிகள் புதுப்பிக்கப்படும். ஒரு ரயிலை புதுப்பிக்க 15 நாட்கள் தேவைப்படும். அதுமட்டுமின்றி, தற்போது ஓட்டுநர் இல்லாத ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே, பழைய டெக்னாலஜியில் செய்யப்பட்ட ரயில்களை பயணியர் குறைவாக பயணிக்கும் வழித்தடத்திற்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளை மேற்கொள்வதால், தொழில்நுட்ப கோளாறால் ரயில் சேவையில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம் என மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
