தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 105 வயது தாயை பார்க்க நடந்தே வந்த 85 வயது மகள்

 105 வயது தாயை பார்க்க நடந்தே வந்த 85 வயது மகள்

 105 வயது தாயை பார்க்க நடந்தே வந்த 85 வயது மகள்


ADDED : செப் 12, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா: கடந்த, 20 ஆண்டுகளுக்கு பின், தன், 105 வயது தாயை பார்க்க, 85 வயது மகள் கரடு முரடான வனப் பகுதியில் நடந்து வந்தார்.

தட்சிண கன்னடா மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின் மலவந்திகே கிராமத்தில் உள்ள மக்கி என்ற இடத்தில் வசிப்பவர் சீதம்மா, 105. இவருக்கு, 11 பிள்ளைகள் உள்ளனர்.

மூத்த மகள் சுசீலாவுக்கு, 85 வயதாகிறது. இவருக்கு திருமணமாகி மித்தவாகிலு கிராமத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

வனப்பாதை மக்கியில் உள்ள சீதம்மாவின் வீட்டுக்கு செல்வது, எளிதான விஷயம் அல்ல. பிரதான சாலை வரை ஜீப்பில் செல்லலாம். அங்கிருந்து ஒன்றரை கி.மீ., துாரம் வனப்பாதையில் நடந்து செல்ல வேண்டும்.

வழியில் குன்று, பாறைகள், நீரோடைகளை கடந்து செல்ல வேண்டும். ஒரு காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை, சுசீலா தன் தாயை பார்க்க செல்வது வழக்கம்.

இவருக்கு, 85 வயதான பின், அவரால் கடினமான பாதையில் செல்ல முடியவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக, தன் தாயை பார்க்க சுசீலா செல்லவில்லை.

சமீப நாட்களாக தன் தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையால் தவித்தார். இதை தன் பேர பிள்ளைகளிடமும, அவ்வப்போது கூறினார். இவருக்கு 85 வயது என்பதால், நடக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

அட்டைப்பூச்சி தாயை பார்க்க வேண்டும் என்ற, பாட்டியின் ஆசையை நிறைவேற்ற பேர பிள்ளைகள் முடிவு செய்தனர்.

அவருக்கு தேவையான பொருட்களுடன், நேற்று முன் காலை வாகனம் செல்லும் சாலை வரை, ஜீப்பில் அழைத்து வந்தனர். அங்கிருந்து பாட்டியின் கையை பிடித்து, பாதுகாப்பாக நடக்க வைத்து அழைத்து சென்றனர்.

குன்றின் மீது ஏறி, இறங்குவது, நீரோடையை தாண்டுவது, கரடு முரடான பாதையில் செல்வது, சுசீலாவுக்கு பெரும் சவாலாக இருந்தது.

வழியில் அவரது காலில் அட்டைப்பூச்சி கடித்து, ரத்தத்தை உறிஞ்சியது. வலி அதிகமாக இருந்தும், தன் தாயை பார்க்க வேண்டும் என்ற துடிப்பால், பயணத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து நடந்து தாய் வீட்டை அடைந்து, அவரை பார்த்தார்.

வயது முதிர்வு காரணமாக, சீதம்மாவுக்கு பழைய நினைவுகள் குறைந்துள்ளன. தாயும், மகளும் பேர பிள்ளைகளுடன் பழைய சம்பவங்களை பேசி மகிழ்ந்தனர்.

சுசீலாவின் பேரன் கேசவா கூறியதாவது:

பாட்டியை அழைத்து கொண்டு, கொள்ளுப்பாட்டியை பார்க்க வேண்டும் என்பது, எங்களின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது.

ஆனால், பாட்டிக்கு வயதானதாலும், கொள்ளுப்பாட்டி வீட்டுக்கு செல்லும் பாதை, சரியாக இல்லாததாலும், எங்கள் ஆசை நிறைவேறாமல் இருந்தது. பாட்டியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையில், அழைத்து வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us