/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
11 ரயில்களுக்கு இன்று முதல் கூடுதலாக நிறுத்தங்கள்
/
11 ரயில்களுக்கு இன்று முதல் கூடுதலாக நிறுத்தங்கள்
ADDED : ஆக 30, 2025 03:27 AM
பெங்களூரு: 'கர்நாடகாவில் இருந்து பல்வேறு மாவட்டம், மாநிலங்களுக்கு செல்லும் 11 ரயில்களுக்கு, இன்று முதல், புதிதாக சில நிறுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில் எண் 16219: சாம்ராஜ் நகர் - திருப்பதி ரயில், அசோகபுரம்
எண் 16220: திருப்பதி - சாம்ராஜ் நகர் பட்சூர், முலனுார், குடுபள்ளி, காமசமுத்திரம், அசோகபுரம்
எண் 16546: சிந்தனுார் - யஷ்வந்த்பூர் ரயில், தலகு, அம்மாசந்திரா, தொட்டபெலே
எண் 16545: யஷ்வந்த்பூர் - சிந்தனுார் ரயில், அம்மாசந்திரா, தலகு
எண் 16227: மைசூரு - தாலகுப்பா ரயில், ஹெஜ்ஜாலா
எண் 17391: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - சிந்தனுார் ரயில், மல்லேஸ்வரம், தொட்டபெலே, தேவர்குட்டா
எண் 17392: சிந்தனுார் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில், தேவர்குட்டா, தொட்டபெலே, மல்லேஸ்வரம்
எண் 56904: தார்வாட் - சோலாபூர் ரயில், நாவலுார், உன்கல்
எண் 56903: சோலாபூர் - தார்வாட் ரயில், உன்கல், நாவலுார்
எண் 16217 / 16218: சாய்நகர் ஷிருடி - மைசூரு ரயில் நிம்பல்
மேற்கண்ட ரயில்கள், குறிப்பிட்ட இந்த ரயில் நிலையங்களில் இன்று முதல் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.