/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தமிழக தொழிலாளி கொலை 12 பேருக்கு ஆயுள் தண்டனை
/
தமிழக தொழிலாளி கொலை 12 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 10, 2025 04:57 AM
ராம்நகர்:தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஹுலிபண்டே கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். தொழிலாளி. இவருக்கு சொந்தமான நிலம், ராம்நகரின் கனகபுரா தாலுகா ஹுனசனஹள்ளி கிராமத்தில் உள்ளது.
இதே ஊரில் இவரது உறவினர்களும் வசிக்கின்றனர். சங்கருக்கும், அவரது உறவினரான மம்தா என்பவருக்கும் இடையே ஹுனசனஹள்ளியில் நில பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் 2021ம் ஆண்டு சங்கர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மாதேஷ், சிவகுமார், லோகேஷ், கார்த்திக், வேணு, திலீப்ராஜ், ராமசந்திரா, குரப்பா, தசரதன், ஹரிஷ், சுரேஷ், மகேஷ் உட்பட 17 பேர் மீது, ராம்நகர் 2வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். பந்தே மகேஷ், முனிசாமி, மம்தா, வெங்கடேஷ், வினய் ஆகிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.
வழக்கு தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி குமார் நேற்று தீர்ப்பு கூறினார். 12 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

