ADDED : ஜூலை 18, 2026 12:09 AM
அ நிறம் | அளவு
கோலார்; கோலாரின், சின்னப்புரா கிராமத்தில் கொட்டகை ஒன்றில், 12 ஆடுகள் இறந்து கிடந்தன. அவற்றை சிறுத்தை தாக்கி இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
விவசாயி நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான அந்த ஆடுகளை, கொட்டகையில் வைத்திருந்தார். நள்ளிரவில் வீடு திரும்பிய அவர், நேற்று காலையில் கொட்டகைக்கு சென்று பார்த்த போது, அடைக்கப்பட்டிருந்த, 12 ஆடுகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன.
எனவே, சிறுத்தை தான் அவற்றை தாக்கியிருக்க கூடும் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.
