தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 14 வயது சிறுவன் பரிதாப பலி குடிநீர் வாரியம் மீது குற்றச்சாட்டு

 14 வயது சிறுவன் பரிதாப பலி குடிநீர் வாரியம் மீது குற்றச்சாட்டு

 14 வயது சிறுவன் பரிதாப பலி குடிநீர் வாரியம் மீது குற்றச்சாட்டு


ADDED : பிப் 03, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மூடப்படாமல் இருந்த குடிநீர் இணைப்பு தொட்டியில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் உயிரிழந்ததார்.

பெங்களூரு தட்டகுனியில் வசிக்கும் ரஜினிகாந்த் மகன் மகன் பிரீத்தம், 14, ஒன்பதாம் வகுப்பு மாணவன். விளையாடுவதற்காக வீட்டை விட்டு கடந்த மாதம் 29ம் தேதி வெளியேறினார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரின் பெற்றோர் அக்கம், பக்கத்தில் விசாரித்தனர். இருப்பினும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனால், ககலிபுரா போலீஸ் நிலையத்தில் அன்றே புகார் அளித்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தட்டகுனி பகுதிக்கு அருகில் இருந்த பெங்களூரு குடிநீர், வடிகால் வாரியத்தின் மூடப்படாமல் இருந்த குடிநீர் குழாய் இணைப்பு தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்து உள்ளது.

அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, தொட்டியில் மனித உடல் கிடப்பது தெரிந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணப்பு துறையினர் 40 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்ட தொட் டியில் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டனர். விசாரணையில், அது காணாமல் போன பிரீத்தமின் உடல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவனின் தாய் புஷ்பா கூறியதாவது:

என் மகன் காணாமல் போன அன்றே போலீசில் புகார் அளித்தோம்.'நாங்கள் வேறு வேலையாக இருக்கிறோம். நீங்களே தேடுங்கள்' என போலீசார் அலட்சியமாகப் பதிலளித்தனர்.

ஆரம்பத்திலேயே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகனை உயிருடன் மீட்டிருக்கலாம். பல ஆண்டுகளாகத் திறந்த நிலையில் கிடக்கும் தொட்டியை மூட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு எச்சரிக்கை பதாதைகளும் வைக்கப்படவில்லை. இதுவே, எனது மகன் உயிரிழப்பிற்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, பெங்., குடிநீர், வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'இப்பணிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டன. தொட்டியின் மூடி திறந்திருந்தது குறித்து எங்களுக்கு தெரியாது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us