தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பியது சரியே'

 'வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பியது சரியே'

 'வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பியது சரியே'


ADDED : பிப் 03, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: “வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவை கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது சரியே,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறி உள்ளார்.

இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:

வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா, ஜனநாயக அமைப்புக்கு எதிரானது.இந்த சட்டமே குறைபாடுடையது. எதிர்க்கட்சிகளை அவமதிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது. எனவே, இதை கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது சரியே.

தட்சிண கன்னடாவில் பஜ்ரங் தளம் ஆர்வலர் ஷரன் மாவட்ட எல்லையை தாண்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதே சமயம், பெங்களூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரை கண்டுபிடித்து கொடுத்த ஹிந்து ஆர்வலர் புனித் கெரேஹள்ளி கைது செய்யப்பட்டுள்ளார்.

மாநில அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே, முதல்வர் சித்தராமையா மத்திய அரசை குற்றஞ்சாட்டி வருகிறார்.

இது, நமது மாநிலத்திற்கும், நாட்டிற்கும் நல்லது கிடையாது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் அரசு, உத்தரவாத திட்டங்களை முறையாக செயல்படுத்த தவறிவிட்டது.மத்திய பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us