/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாற்று சான்றிதழுக்கு 15 நாள் அவகாசம்
/
மாற்று சான்றிதழுக்கு 15 நாள் அவகாசம்
ADDED : டிச 03, 2025 06:42 AM
பெங்களூரு: ''தனியார் பள்ளிகளில் மாற்று சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும்,'' என கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
கர்நாடகாவில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாற்று சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு 15 நாட்களுக்குள் மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும் என கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியது.
இது தொடர்பான சுற்றறிக்கையில், 'தனியார் பள்ளிகளில் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்கள், அரசு பள்ளியில் சேருவதற்காக மாற்று சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கின்றனர். இவர்களுக்கு 15 நாட்களுக்குள் மாற்று சான்றிதழை தனியார் பள்ளி நிர்வாகம் கட்டாயம் வழங்க வேண்டும். பள்ளி கட்டணத்தை கட்டினால் மட்டுமே மாற்று சான்றிதழ் தரப்படும் என கூறக்கூடாது. இதனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடும்.
ஒரு வேளை மாற்று சான்றிதழ் 15 நாட்களுக்குள் வழங்கவில்லை என்றால், பெற்றோர் நேரடியாக வட்டார கல்வி அதிகாரியிடம் முறையிடலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

