/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்
/
அரசு பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்
ADDED : ஏப் 28, 2025 06:58 AM

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ் நகர் மலை மஹாதேஸ்வரா மலையில் இருந்து மைசூருக்கு சென்ற அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பேர் படுகாயம் அடைந்தனர். நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுாரில் உள்ள மலை மஹாதேஸ்வரா கோவிலில் இருந்து மைசூருக்கு நேற்று முன்தினம் இரவு 30க்கும் மேற்பட்ட பயணியருடன் அரசு புறப்பட்டது.
மலையில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சனீஸ்வரர் கோவில் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை பஸ் இழந்தது. தாறுமாறாக ஓடிய பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள், வாகனங்களில் வந்தவர்கள் போன்றோர் பஸ்சில் சிக்கிய பயணியரை மீட்டனர். உடனடியாக மலை மஹாதேஸ்வரா மலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தவர்கள் கொள்ளேகால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூன்றரை வயது குழந்தை லிகிதா, ஜோதி, ராஜாமணி உட்பட நான்கு பேர், மலை மஹாதேஸ்வரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
போலீசார் விசாரிக்கின்றனர்.