/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.50 லட்சம் போதை பறிமுதல் டிரைவர் உட்பட 2 பேர் கைது
/
ரூ.50 லட்சம் போதை பறிமுதல் டிரைவர் உட்பட 2 பேர் கைது
ரூ.50 லட்சம் போதை பறிமுதல் டிரைவர் உட்பட 2 பேர் கைது
ரூ.50 லட்சம் போதை பறிமுதல் டிரைவர் உட்பட 2 பேர் கைது
ADDED : மார் 11, 2026 05:21 AM
பெங்களூரு: பெங்களூரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளி போலீசார், கஞ்சா விற்பனை செய்த ஆட்டோ ஓட்டுநர் பயாஸ், 60 என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதுபோல மஹாதேவபுரா பகுதியில் கஞ்சா விற்ற, மேற்கு வங்கத்தின் குர்ஷிந்த் ஆலம், 31 என்பவரும் கைதானார்.
கடந்த 3 ஆண்டுகளாக ராமமூர்த்திநகரில் வசிக்கும் குர்ஷிந்த், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கஞ்சா விற்று உள்ளார். இதற்காக ஒரு பட்டியலையும் தயாரித்து வைத்திருந்தார். கைதான இருவரிடம் இருந்து 37 கிலோ கஞ்சா, 33 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 23.19 கிராம் கிறிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மதிப்பு 48.22 லட்சம் ரூபாய். இருவர் மீதும் கே.ஜி., ஹள்ளி, மஹாதேவபுரா போலீஸ் நிலையங்களில், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது.

