தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு '20 ஆண்டு'

 சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு '20 ஆண்டு'

 சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு '20 ஆண்டு'


ADDED : பிப் 01, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொப்பால்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கடத்தி சென்று பலவந்தமாக தாலி கட்டிய வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொப்பால் நகரின் பெல்வாரா காலனியில் வசிப்பவர் மாருதி போச்சனஹள்ளி, 28. இவர், இதே பகுதியில் வசிக்கும், 16 வயது சிறுமி வீட்டில் இருந்த போது, அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

கடந்த, 2024 பிப்ரவரி 17ல், இச்சம்பவம் நடந்தது. நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என, மிரட்டியதால் சிறுமி பெற்றோரிடம் கூறவில்லை.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின், கொப்பால் பஸ் நிலையத்தில் இருந்து சிறுமியை கடத்திச் சென்ற மாருதி போச்சனஹள்ளி, சிக்க சிந்துாகி கிராமத்தின காளம்மா கோவில் முன் பலவந்தமாக தாலி கட்டினார். அங்கிருந்து சிறுமியை அழைத்துக் கொண்டு பல இடங்களில் சுற்றினார்.

ம கள் கடத்தப்பட்டது குறித்து, கொப்பால் மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.

விசாரணை நடத்திய போலீசார், மாருதி போச்சனஹள்ளியை கண்டுபிடித்து, சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையை முடித்து, கொப்பால் நகரின் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்ற விசாரணையில், மாருதி போச்சனஹள்ளி மீதான குற்றம் உறுதியானது. அவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 70,000 ரூபாய் அ பராதம் விதித்து நீதிபதி குமார் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us