/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமி பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை
/
சிறுமி பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை
ADDED : மே 17, 2025 11:13 PM
பங்கார்பேட்டை: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 42,000 ரூபாய் அபராதமும் விதித்து, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
பங்கார்பேட்டையை சேர்ந்த சிறுமி ஒருவரை பெங்களூரு விஜினாபுராவை சேர்ந்த ஜே.சுதாகர், 42, என்பவர் பலாத்காரம் செய்ததாக 2023 அக்டோபர் 2ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
'போக்சோ' சிறப்பு நீதிமன்றத்தில் பங்கார்பேட்டை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
வழக்கை சிறப்பு நீதிபதி கே.பி. பிரசாத் விசாரித்து வந்தார்.
விசாரணை முடிவில் ஜே. சுதாகரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 42,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்கும்படி உத்தரவிட்டார்.