/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
16 வயது சிறுமி பலாத்காரம் 21 ஆண்டு சிறை தண்டனை
/
16 வயது சிறுமி பலாத்காரம் 21 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஆக 02, 2025 01:50 AM

பெங்களூரு: சிறுமியை பலாத்காரம் செய்து, மிரட்டிய குற்றவாளிக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தட்சிண கன்னடா கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வாலை சேர்ந்தவர் முகமது மன்சூர், 30. கடந்த 2023ம் ஆண்டு மே 30ம் தேதி, 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இவ்விஷயத்தை வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
இவ்விஷயத்தை கூறாமல் இருந்த சிறுமியின் நடவடிக்கை சந்தேகமடைந்த பெற்றோர், அதுகுறித்து கேட்டனர். அப்போது சிறுமி, நடந்த கொடூரத்தை கூறி உள்ளார். இதையடுத்து, மங்களூரு மகளிர் போலீஸ் நிலையத்தில், டிச., 23ல் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையறிந்த முகமது மன்சூர் தலைமறைவானார். எட்டு மாதங்கள் தலைமறைவாக இருந்த அவர், 2024 ஜூலை 2ல் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூடிசியல் கஷ்டடியில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கை விசாரித்த போலீசார், கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
முகமது மன்சூர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், 20 ஆண்டு சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும்; கொலை மிரட்டல் விடுத்தற்காக ஓராண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.