/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் 3,923 பக்க குற்றப்பத்திரிகை மகேஷ் திம்மரோடி உட்பட 6 பேர் சதிகாரர்கள்
/
தர்மஸ்தலா வழக்கில் 3,923 பக்க குற்றப்பத்திரிகை மகேஷ் திம்மரோடி உட்பட 6 பேர் சதிகாரர்கள்
தர்மஸ்தலா வழக்கில் 3,923 பக்க குற்றப்பத்திரிகை மகேஷ் திம்மரோடி உட்பட 6 பேர் சதிகாரர்கள்
தர்மஸ்தலா வழக்கில் 3,923 பக்க குற்றப்பத்திரிகை மகேஷ் திம்மரோடி உட்பட 6 பேர் சதிகாரர்கள்
ADDED : நவ 21, 2025 06:19 AM

மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் 3,923 பக்க குற்றப்பத்திரிகையை, பெல்தங்கடி நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., தாக்கல் செய்துள்ளது. மகேஷ் திம்மரோடி உட்பட 6 பேர் சதி திட்டம் தீட்டியவர்கள் என, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக, மஞ்சுநாதா கோவிலில் துாய்மை பணியாளராக வேலை செய்த சின்னையா, கடந்த ஜூலை 6ம் தேதி பெல்தங்கடி போலீசில் புகார் செய்தார்.
அவர் புகார் செய்த மறுநாளே, தர்மஸ்தலாவுக்கு சென்ற தன் மகள் அனன்யா பட்டை காணவில்லை என, சுஜாதா பட் என்பவரும் புகார் செய்தார்.
இதையடுத்து தர்மஸ்தலா வழக்கை விசாரிக்க, டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையில், ஜூலை 20ம் தேதி எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது.
இக்குழுவில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், ஜிதேந்திர குமார் தயமா, மூத்த போலீஸ் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.
20 அடி பள்ளம் புகார் அளித்த சின்னையாவிடம் விசாரித்தபோது, உடல்கள் புதைத்த இடங்களை அடையாளம் காட்டுவதாக கூறினார். அவர் அடையாளம் காட்டிய இடங்களில் 20 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது.
ஒரு சில இடங்களில் மட்டும் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள் கிடைத்தன. மற்ற இடங்களில் எதுவும் கிடைக்கவில்லை. பொய் புகார் அளித்ததால், அவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே குடும்பத்திற்கு எதிராக செயல்படும், ராஷ்ட்ரீய ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடி, சமூக ஆர்வலர்கள் கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், சுஜாதா பட், தர்மஸ்தலாவில் 2012ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா ஆகியோர், வீரேந்திர ஹெக்டே, மஞ்சுநாதா கோவிலுக்கு களங்கம் ஏற்படுத்த சின்னையா மூலம் பொய் புகார் அளித்தது தெரிய வந்தது.
' டிமிக்கி' இதை தொடர்ந்து மகேஷ் திம்மரோடி உட்பட 5 பேரிடமும், எஸ்.ஐ.டி., விசாரணை நடத்தியது. யு - டியுபர்கள் சமீர், முனாப் உட்பட பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
விசாரணை நடக்கும்போதே, சுஜாதா பட் அப்ரூவர் ஆனார்.
விசாரணை ஆரம்பித்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், பெல்தங்கடி நீதிமன்றத்தில் நீதிபதி விஜயேந்திராவிடம் 3,923 பக்க குற்றப்பத்திரிகையை, விசாரணை அதிகாரி ஜிதேந்திர குமார் தயமா நேற்று தாக்கல் செய்தார்.
இது இடைக்கால குற்றப்பத்திரிகை என்றும் முழு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மேலும் சில மாதங்கள் ஆகும் என்றும் கூறப்பட்டது.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 'தர்மஸ்தலா வழக்கில் மகேஷ் திம்மரோடி, கிரிஷ் மட்டன்னவர், ஜெயந்த், சுஜாதா பட், விட்டல் கவுடா, சின்னையா ஆகிய 6 பேரும் சதி செய்தது பற்றி குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை; பள்ளம் தோண்டியபோது என்னென்ன கிடைத்தன; விசாரணைக்கு ஆஜராகாமல் மகேஷ் திம்மரோடி, ஜெயந்த், கிரிஷ் மட்டன்னவர், விட்டல் கவுடா கொடுக்கும் டிமிக்கி உட்பட அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

