/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாரடைப்பில் 24 வயது மகன் மரணம் பெற்றோர் இலவச மருத்துவ முகாம்
/
மாரடைப்பில் 24 வயது மகன் மரணம் பெற்றோர் இலவச மருத்துவ முகாம்
மாரடைப்பில் 24 வயது மகன் மரணம் பெற்றோர் இலவச மருத்துவ முகாம்
மாரடைப்பில் 24 வயது மகன் மரணம் பெற்றோர் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 14, 2025 04:57 AM

துமகூரு : இளம் வயதில் மகனை இழந்த பெற்றோர், மகனின் நினைவாக கிராமத்தினருக்கு மருத்துவ முகாம் நடத்தியுள்ளனர்.
துமகூரு நகரின் ஹெப்பாகா கிராமத்தை சேர்ந்தவர் நீலகண்ட சாமி, 24. ஆரோக்கியமாக இருந்த இவர், இரண்டு வாரங்களுக்கு முன், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மகனின் இறப்பால் பெற்றோர் மனம் விரக்தி அடைந்தனர்.
தங்கள் மகனுக்கு ஏற்பட்ட நிலை, மற்றவருக்கு ஏற்படக்கூடாது என்பதால், நீலகண்ட சாமியின் பெற்றோர், கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தி, ஒவ்வொருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர்.
பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள் என, அனைவருக்கும் ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனையுடன், இ.சி.ஜி.,யும் எடுக்க வைக்கின்றனர்.
நேற்று முன்தினம், மருத்துவ பரிசோதனை நடக்கும் போது உதய், 13, என்ற பள்ளி மாணவருக்கு, வகுப்பறையில் இதய வலி ஏற்பட்டது.
எனவே, அவருக்கும் டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் மாணவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரிந்ததால், அவரது பெற்றோர் நிம்மதி அடைந்தனர். நீலகண்ட சாமியின் பெற்றோரின் நற்செயலை, பலரும் பாராட்டி உள்ளனர்.
6 பேர் பலி
கர்நாடகாவில் கடந்த 48 மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஆறு பேர் உயிரிழந்து உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 45 வயதுக்கு உட்பட்டோர் என தெரிய வந்து உள்ளது.
இறந்தவர்களின் விபரம்:
ராய்ச்சூர் மாவட்டம், சர்ஜாபூர் பசவராஜ், 46; தாவணகெரே நகரம் சக்தி நகர் அனில், 40; மைசூரு டி நரசிபுரா அருண், 44; மைசூரு சம்பத்குமார், 66; கதக், லக் ஷமேஸ்வர் ஷோபா வடக்கனவரா, 42; சிக்கமகளூரு தாக் ஷாயனி, 50 ஆகிய ஆறு பேர், 48 மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
இவர்களில் சிலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும், சிலர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர்.