/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காபியில் துப்பினால் ரூ.1,000; இளம்பெண்ணை சீண்டியவர்
/
காபியில் துப்பினால் ரூ.1,000; இளம்பெண்ணை சீண்டியவர்
காபியில் துப்பினால் ரூ.1,000; இளம்பெண்ணை சீண்டியவர்
காபியில் துப்பினால் ரூ.1,000; இளம்பெண்ணை சீண்டியவர்
ADDED : ஜூலை 14, 2025 05:28 AM
பெங்களூரு: 'காபியில் துப்பினால் 1,000 ரூபாய் தருகிறேன்' என்று இளம்பெண்ணுக்கு, வாலிபர் ஒருவர் வித்தியாசமான பந்தயம் வைத்தார்.
சமூக வலைதளமான, 'ரெட்டிட்'டில் 22 வயது இளம்பெண் ஒருவரின் பதிவு:
நான் பெங்களூரில் வசிக்கிறேன். எனக்கு அதிக நண்பர்கள் இல்லை. சமீபத்தில், சர்ச் தெருவுக்கு தனியாக சென்று இருந்தேன். திடீரென என்னிடம், 30 வயது வாலிபர் ஒருவர் வந்து பேச்சு கொடுத்தார். கோரமங்களாவில் தனியார் நிறுவனத்தில் பணி செய்வதாக கூறினார். என்னிடம் கண்ணியமாகவும், மரியாதையாகவும் பேசினார்.
நாங்கள் ஒன்றாக சேர்ந்து நடக்க ஆரம்பித்தோம். சர்ச் தெருவில் உள்ள, 'ஸ்டார்பக்ஸ்' காபி கடைக்கு அழைத்து சென்றார். இருவருக்கும் காபி ஆர்டர் செய்தார். எனது காபியை நான் குடித்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த வாலிபர் திடீரென என்னை பார்த்து, 'இப்போது நான் உங்களுக்கு வைக்கும் கோரிக்கை கொஞ்சம் விசித்திரமாக இருக்கும். ஆனாலும், நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்' என்றார். நான் சிரித்து கொண்டே, 'என்ன விசித்திரம்' என்று கேட்டேன்.
அவர் குடித்து கொண்டிருந்த காபியில் என்னை துப்ப சொன்னார். அதிர்ச்சி அடைந்து அவரை முறைத்து பார்த்தேன். 'முடியாது' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட முயன்றேன். காபியில் துப்பினால் 1,000 ரூபாய் தருவதாக கூறினார். ஆனாலும், நான் அங்கிருந்து நகர்ந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து விட்டேன்.
அதன்பின் ஒரு இடத்தில் அமர்ந்து யோசித்து பார்த்த போது, 1,000 ரூபாயை மிஸ் செய்து விட்டோமா என தோன்றியது. வெறும் துப்பல் தானே; நான் அந்த நபரை தொடக்கூட இல்லை என்று தோன்றியது. பெங்களூரு இப்ப இப்படித்தான் இருக்கா. இது சாதாரணமா.
இவ்வாறு அவர் பதிவிட்டு இருந்தார்.