தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பி.டி.ஏ., நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து அகற்றம்

 பி.டி.ஏ., நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து அகற்றம்

 பி.டி.ஏ., நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 25 வீடுகள் இடித்து அகற்றம்


ADDED : ஜன 09, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 06:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தனிசந்திரா: பி.டி.ஏ., நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, 25க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. நோட்டீஸ் கொடுக்காமல் வீடுகள் இடிக்கப்பட்டதாக வீடுகளை இழந்தவர்கள் கண்ணீருடன் கூறினர்.

பெங்களூரு தனிசந்திரா சாராயிபாளையா அஸ்வத் நகரில், தங்களுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பது பற்றி, பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது.

பி.டி.ஏ., நிலத்தை ஆக்கிரமித்து, 60 வீடுகள் கட்டப்பட்டதை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். நேற்று காலை 7:00 மணிக்கு ஐந்து பொக்லைன் இயந்திரங்கள், 200க்கும் மேற்பட்ட போலீசாருடன் அஸ்வத் நகருக்கு, பி.டி.ஏ., அதிகாரிகள் சென்றனர்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகளை இடிக்க போவதாக கூறி, வீடுகளில் வசித்தவர்களை வெளியேற்றினர். வீடுகளில் இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்ட பின், வீடுகள் இடிப்பு செயல்முறை துவங்கியது. நேற்று ஒரே நாளில் மட்டும், 25 க்கும் மேற்பட்ட, வீடுகள் இடிக்கப்பட்டன. இங்கு வசித்தவர்கள் வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் இடிக்கப்பட்ட இடத்தின் முன்பே அமர்ந்து உள்ளனர்.

கடந்த, 25 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்துகிறோம். வீட்டிற்கு பட்டா உள்ளது; இதுவரை எந்த அதிகாரியும் வந்து ஆக்கிரமிப்பு வீடு என்று கூறவில்லை. நோட்டீஸ் கூட கொடுக்காமல் இப்போது வீடுகளை இடித்து உள்ளனர் என, பலர் கண்ணீர்மல்க கூறினர். மீதமுள்ள வீடுகள் இன்று இடிக்கப்பட உள்ளன.

இதற்கிடையில், கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்ட பழைய, புதிய பக்கீர் காலனிகள், வாசிம் லே அவுட்டில் வசித்தோருக்கு வீடுகள் வழங்கும் செயல்முறை ஒரு பக்கம் நடக்கிறது. அங்கு, 167 வீடுகள் இடிக்கப்பட்டு இருந்தன.

முதற்கட்டமாக 26 குடும்பத்திற்கு மாற்று வீடு கொடுக்க அரசு முடிவு செய்து உள்ளது. அங்கு வசித்தவர்களில் 108 கன்னடா; 103 உருது; தமிழ் 13; ஹிந்தி, தெலுங்கு தலா 11 குடும்பத்தினர் என்று அரசு கண்டறிந்து உள்ளது. பா.ஜ.,வினர் கூறியது போல வங்கதேசத்தினர் யாரும் வசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us