2வது திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு: பெங்களூரில் இன்று முதல்வர் துவக்கம்
2வது திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு: பெங்களூரில் இன்று முதல்வர் துவக்கம்
UPDATED : நவ 03, 2026 12:11 AM
ADDED : நவ 03, 2026 12:06 AM
பெங்களூரு: கர்நாடக அரசின் திறன் மேம்பாட்டு, தொழில்முனைவோர் மற்றும் வாழ்வாதார துறை சார்பில், 2வது திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு இன்று துவங்குகிறது.
பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள தி லலித் அசோக் ஹோட்டலில், ‘தொழிலாளர்கள் 2030: அளவு, அமைப்புகள், ஒருங்கிணைப்பு’ என்ற தலைப்பில் நடக்கும் மூன்று நாள் மாநாட்டை, முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார்.
எதிர்கால மனிதவள மேம்பாடு, புதிய தொழில்நுட்ப பயிற்சி, உலகளாவிய வேலைவாய்ப்பு தகுதி, அரசு – தனியார் கூட்டாண்மை, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவை பற்றி விவாதிப்பதே மாநாட்டின் முக்கிய நோக்கம்.
தேசிய அளவிலான முன்னணி துறையின் வல்லுநர்கள் 150 பேர் பல அமர்வுகளில் உரையாற்றுகின்றனர்.
சுற்றுச்சூழல் கூட்டாளர்கள், கண்காட்சியாளர்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.
இளைஞர்களுக்கு இடையில், தொழில்நுட்ப போட்டிகள் நடக்க உள்ளன. மாணவர்கள், இளைஞர்கள் நேரடியாக தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவும், தங்கள் தொழில் வாய்ப்பை கண்டறியவும் இளைஞர் மண்டலம் உருவாக்கப்படும்.
சிறந்த நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும். அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை நேரடியாக, நிபுணர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் வகையில், சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடக்கும்.
