தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பணியாற்றிய இடத்தில் ரூ.40 லட்சம் சுருட்டியவர் கைது

பணியாற்றிய இடத்தில் ரூ.40 லட்சம் சுருட்டியவர் கைது

பணியாற்றிய இடத்தில் ரூ.40 லட்சம் சுருட்டியவர் கைது


UPDATED : நவ 03, 2026 03:48 AM

ADDED : நவ 02, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 03:48 AM ADDED : நவ 02, 2026 11:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அடிமையாகி, பணியாற்றிய இடத்தில் 40 லட்சம் ரூபாய் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரின் புட்டேனஹள்ளியில் ஸ்ரீகுரு மூர்த்தியும், அவரது மனைவி யசோதாவும், 'ஸ்ரீசாய் தர்ஷனம்' என்ற பெயரில், டிரஸ்ட் நடத்துகின்றனர். இதில் சீனிவாச நாடகவுடா, 40, என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றுகிறார்.

உரிமையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்த இவர், நான்கு ஆண்டுகளாக யசோதாவின் அறையில் இருந்த லாக்கரை, கள்ளச்சாவியால் திறந்து அதில் வைத்திருந்த பணத்தை, சிறிது, சிறிதாக திருடினார்.

சமீபத்தில் யசோதா, லாக்கரை திறந்து பணத்தை கணக்கிட்ட போது, 40 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. அவருக்கு சீனிவாஸ் நாடகவுடா மீது, சந்தேகம் ஏற்பட்டது.

இதுபற்றி கணவர் ஸ்ரீகுருமூர்த்தியிடம் கூறினார். அவரும் சீனிவாச நாடகவுடாவின் பர்சை சோதித்த போது, லாக்கரின் கள்ளச்சாவி இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து, புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில், புகார் செய்தனர். போலீசாரும் விசாரித்து, சீனிவாச நாடகவுடாவை கைது செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டு, பணத்தை இழந்து,. பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இதை அடைப்பதற்காக, டிரஸ்ட் பணத்தை திருடியதை, விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us