/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3 மாத 'கிரஹலட்சுமி' பணம் விரைவில் வரும்: லட்சுமி
/
3 மாத 'கிரஹலட்சுமி' பணம் விரைவில் வரும்: லட்சுமி
ADDED : மே 01, 2025 05:32 AM

பெலகாவி: ''மூன்று மாதம் நிலுவையில் உள்ள, கிரஹ லட்சுமி பணம் விரைவில் விடுவிக்கப்படும்,'' என்று, பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறி உள்ளார்.
பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவி தொகை வழங்கும், கிரஹ லட்சுமி திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக, பல பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மாதம் 2,000 ரூபாய் வரவு வைக்கவில்லை. சில பகுதிகளில் பெண்கள் அதிருப்தி வெளிப்படுத்தினர்.
இதுபற்றி அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:
கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் விடுவிப்பதில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டது.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாத பணத்தை விடுவிக்க, நிதி துறையிடம் இருந்து ஒப்புதல் வாங்கி உள்ளோம். கூடிய விரைவில் 3 மாத பணம், பெண்களின் வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்யப்படும்.
பெலகாவியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், பெண்கள் மூலம் பா.ஜ., கருப்பு கொடி காட்ட வைத்தது தவறு. மேடையில் வைத்து போலீஸ் அதிகாரியை அடிக்க, முதல்வர் கை ஓங்கவில்லை. எஸ்.பி., எங்கே என்று கோபமாக தான் கேட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.