/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஸ் முனையத்தில் ஜெலட்டின் குச்சிகள் விட்டு சென்ற கோலாரின் 3 பேர் கைது
/
பஸ் முனையத்தில் ஜெலட்டின் குச்சிகள் விட்டு சென்ற கோலாரின் 3 பேர் கைது
பஸ் முனையத்தில் ஜெலட்டின் குச்சிகள் விட்டு சென்ற கோலாரின் 3 பேர் கைது
பஸ் முனையத்தில் ஜெலட்டின் குச்சிகள் விட்டு சென்ற கோலாரின் 3 பேர் கைது
ADDED : ஜூலை 30, 2025 07:49 AM
கலாசிபாளையா : கலாசிபாளையா பி.எம்.டி.சி., பஸ் முனையத்தில் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை விட்டுச் சென்ற வழக்கில், கோலாரை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, கலாசிபாளையா பி.எம்.டி.சி., பஸ் முனையத்தில் உள்ள கழிப்பறைக்கு கடந்த 23ம் தேதி வந்த நபர், ஒரு சாக்குப்பையை விட்டுச் சென்றார். அந்த பையை போலீசார் பிரித்தபோது அதற்குள் 22 ஜெலட்டின் குச்சிகள், 30 டெட்டனேட்டர்கள் இருந்தன.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். பஸ் முனையத்தை சுற்றி சோதனை நடத்தியபோது சந்தேகம்படும்படியான பொருட்கள் வேறெதுவும் சிக்கவில்லை. ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை வைத்து சென்ற மர்ம நபரை கண்டறிய, கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். விசாரணை நடத்த ஐந்து தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், கோலார் மாவட்டம், பங்கார்பேட் ஹஞ்சலா கிராமத்தின் கணேஷ், 38, முனிராஜ், 32, கோலார் தாலுகா பெஞ்சனஹள்ளியின் சிவகுமார், 32, ஆகியோரை, கலாசிபாளையா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலில் உள்ள கல்குவாரியில் பாறைகளை தகர்க்க, கோலாரில் இருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களை வாங்கி வந்ததும், கலாசிபாளையாவில் இருந்து கொள்ளேகால் செல்ல பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது, பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை பார்த்து பயந்து, ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் இருந்த சாக்குப்பையை கழிப்பறை முன் வைத்துவிட்டு, தப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.