/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சலுான் உரிமையாளரை கடத்தி தாக்கிய முன்னாள் முதலாளி உட்பட 3 பேர் கைது
/
சலுான் உரிமையாளரை கடத்தி தாக்கிய முன்னாள் முதலாளி உட்பட 3 பேர் கைது
சலுான் உரிமையாளரை கடத்தி தாக்கிய முன்னாள் முதலாளி உட்பட 3 பேர் கைது
சலுான் உரிமையாளரை கடத்தி தாக்கிய முன்னாள் முதலாளி உட்பட 3 பேர் கைது
ADDED : மே 30, 2025 11:10 PM

அம்ருதஹள்ளி: முடி திருத்தும் கடை உரிமையாளரை கடத்தி தாக்கிய, முன்னாள் முதலாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, அம்ருதஹள்ளியைத் சேர்ந்தவர் சுமிதா, 32. புவனேஸ்வரி நகரில் சலுான் மற்றும் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த சலுானில் சஞ்சு, 40, என்பவர், கடந்த பத்து மாதங்களாக மேலாளாராக இருந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு சஞ்சு நின்றார். நண்பர் ஒருவருடன் சேர்ந்து புவனேஸ்வரி நகரில் புதிதாக முடி திருத்தும் கடை துவங்கினார்.
இதுபற்றி அறிந்த சுமிதா கோபம் அடைந்தார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு அங்கு ஒரு காரில் சென்ற சுமிதா, தன் தோழி காவ்யா, 25, நண்பர் முகமது, 40, ஆகியோருடன் சேர்ந்து சஞ்சுவிடம் தகராறு செய்து தாக்கினர்.
முடிதிருத்தும் கடையில் இருந்து வெளியே இழுத்துச் சென்று, காரில் கடத்திச் சென்றனர். இதுபற்றி முடிதிருத்தும் கடையில் வேலை செய்யும் பெண், சஞ்சுவின் மனைவிக்கு தகவல் கொடுத்தார்.
கடையில் என்ன நடக்கிறது என்பதை, மொபைல் போனில் கண்காணிக்கும் வசதி, சஞ்சுவின் மனைவியிடம் இருந்தது. மொபைல் போனில் கடையில் நடந்த தகராறை பார்த்தார்.
பின், அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று, கணவரை தாக்கி கடத்திய காட்சிகளை காண்பித்தார். அந்த வீடியோவில் இருந்த முகமது ஒரு ரவுடி என்பதால், அவரது மொபைல் போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். சஞ்சுவை பத்திரமாக ஒப்படைக்கும்படி கூறினர்.
இதையடுத்து சஞ்சுவை, ஜக்கூர் அருகே அம்ருதநகரில் இறக்கிவிட்டு சுமிதா கும்பல் தப்பியது. சஞ்சு மீது மூன்று பேரும் கத்தியால் கீறி இருந்தனர். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சஞ்சு அளித்த புகாரில், சுமிதா, காவ்யா, முகமது நேற்று கைது செய்யப்பட்டனர். புதிதாக சலுான் திறந்ததற்காக சஞ்சு தாக்கப்பட்டாரா, வேறு காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடக்கிறது.