ADDED : மே 24, 2026 02:48 AM

அ நிறம் | அளவு
ஹொஸ்கோட்: ''மெஜஸ்டிக் அருகில் மூன்று மாடி கொண்ட பஸ் நிலையம் கட்டப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
ஹொஸ்கோட்டில் நேற்று அவர் கூறியதாவது:
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்கள், 10 ஆயிரம் பயணங்களையும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் 3,000 பயணங்களையும் மேற்கொள்கின்றன.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மெஜஸ்டிக் அருகில் வணிக வளாகத்துடன் கூடிய மூன்று மாடி கொண்ட பஸ் நிலையம் கட்டப்படும். கனகபுரா, சென்னபட்டணா, சிக்கபல்லாபூர், துமகூரு என நான்கு வழித்தடங்களில், குளிர்சாதன வசதி கொண்ட 32 வஜ்ரா விஸ்தாரா பி.எம்.டி.சி., பஸ்களை அறிமுகம் செ ய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
