தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணியர் படுகாயம்

 தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணியர் படுகாயம்

 தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணியர் படுகாயம்


ADDED : ஏப் 14, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: இருசக்கர வாகனத்தில் மோதுவதை தவிர்க்க திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்ததில், 30 பயணியர் படுகாயம் அடைந்தனர்.

ஷிவமொக்காவில் இருந்து ஷிகாரிபுராவுக்கு நேற்று காலை, 30 பயணியருடன் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டி, திடீரென வலது புறமாக திரும்பினார். அவர் மீது மோதுவதை தவிர்க்க, பஸ் ஓட்டுநர் முயற்சித்த போது, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பஸ் சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஏழு பயணியரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏழு மாத கர்ப்பிணி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்ற பயணியருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

14_DMR_0002

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us