/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழையை பயன்படுத்தி 300 கிராம் நகை திருட்டு
/
மழையை பயன்படுத்தி 300 கிராம் நகை திருட்டு
ADDED : ஆக 06, 2025 08:34 AM
பங்கார்பேட்டை : மழையை பயன்படுத்தி, வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், 300 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகாவின் விஜயநகரில் வசிப்பவர் சுனில் குமார். இவரது குடும்பத்தினர், பணி நிமித்தமாக இரண்டு நாட்களுக்கு முன்பு, வீட்டை பூட்டிக் கொண்டு பெங்களூரு சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம், கோலார் மாவட்டத்தில் கனமழை பெய்தது. யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை நிலவியது. இதை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள், சுனில்குமார் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 300 கிராம் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர்.
சுனில்குமாரின் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டதை கவனித்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக பெங்களூரில் இருந்த அவருக்கு போன் செய்து தகவல் கூறினர். அவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது. போலீசாரிடம் புகார் அளித்தார்.
பங்கார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.