UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 08:44 PM
பெங்களூரு: நான்கு ஐ.ஏ.எஸ்., மற்றும் ஒரு ஐ.பி.எஸ்., என, அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுஷ்மா கோட்போலே, பெங்களூரு பொது நுாலகத்தின் கமிஷனராக நியமனம்
விவசாய துறையின் உணவு பதப்படுத்துதல் துறையின் கூடுதல் செயலராக இருந்த வசந்த குமார், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் இயக்குனராக நியமனம்
கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் குறைதீர்ப்பாளராக பணியாற்றிய நாகராஜ், சமூக நலத்துறை கமிஷனராக நியமனம்
டில்லியில் உள்ள கர்நாடக பவனில் கூடுதல் குடியிருப்பு கமிஷனர் அக்ருதி பன்சால், சாம்ராஜ்நகர் மாவட்ட பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக நியமனம்
தார்வாட் மாவட்ட கூடுதல் எஸ்.பி., அனன்யா ஸ்ரீவத்சவா, டில்லியில் உள்ள கர்நாடக பவன் கூடுதல் குடியிருப்பு கமிஷனராக நியமனம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இவர்களில் அனன்யா ஸ்ரீவத்சவா ஐ.பி.எஸ்., அதிகாரி.
