தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரசுக்கு ரூ.2,000 அபராதம் கர்நாடக ஐகோர்ட் அதிரடி

அரசுக்கு ரூ.2,000 அபராதம் கர்நாடக ஐகோர்ட் அதிரடி

அரசுக்கு ரூ.2,000 அபராதம் கர்நாடக ஐகோர்ட் அதிரடி


UPDATED : அக் 07, 2026 12:08 AM

ADDED : அக் 07, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 12:08 AM ADDED : அக் 07, 2026 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக அரசு, 2025 – 26ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த, முதல்வர் அடிப்படை வசதிகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு 50 கோடி ரூபாயும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு 25 கோடி ரூபாயும் நிதி வழங்குகிறது.

இதன் மூலம் பாரபட்சமா க நடந்து கொள்கிறது என, குற்றம்சாட்டி பாகல்கோட் மாவட்டத்தின், ஜமகன்டி தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., ஜெகதீஷ் சிவய்யா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பொது நலன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு தரப்பில் மனுவுக்கு, ஆட்சேபனை தாக்கல் செய்ய, பல முறை அவகாசம் அளித்தது. நடப்பாண்டு பிப்ரவரி 17ல், கடைசி கால அவகாசம் அளித்திருந்தது. அதன் பிறகும் பல முறை வழக்கு விசாரணைக்கு வந்தும், அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்யவில்லை.

இந்த மனு நீதிபதி அனு சிவராமன், நீதிபதி பரத்குமார் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மீண்டும் கால அவகாசம் கேட்டார்.

இ தனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ‘பொது நலன் மனுக்களில் நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அரசு ஆட்சேபனை தாக்கல் செய்ய, அவ்வப்போது கால அவகாசம் கேட்பது சரியல்ல’ என கூறி, அரசுக்கு 2,000 ரூபா ய் அபராதம் விதித்தது. நவம்பர் 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us