தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மின்மாற்றி வெடித்ததில் பாதசாரி படுகாயம்

மின்மாற்றி வெடித்ததில் பாதசாரி படுகாயம்

மின்மாற்றி வெடித்ததில் பாதசாரி படுகாயம்


UPDATED : அக் 08, 2026 12:00 AM

ADDED : அக் 07, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:00 AM ADDED : அக் 07, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நடைபாதையில் இருந்த மின்மாற்றி திடீரென வெடித்ததில், பாதசாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

பெங்களூரு பாகலுார் கிராஸ் பகுதியில் உள்ள அமேசான் தனியார் நிறுவனத்தின், மூன்றாவது நுழைவாயிலுக்கு அருகிலுள்ள நடைபாதையில், மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி, நேற்று காலை 10:00 மணிக்கு திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தது.

அப்போது, அப்பகுதியில் நடந்து சென்ற பாதசாரியான முகமது அப்ரோஸ், 35, என்பவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக, அவர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, அவரது கையில் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மதியம் 1:00 மணிக்கு அவர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். இதுகுறித்து, எலஹங்கா ஓல்டு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us