தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/‘வந்தே பாரத்’ ரயில் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணியர் கோபம்

‘வந்தே பாரத்’ ரயில் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணியர் கோபம்

‘வந்தே பாரத்’ ரயில் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணியர் கோபம்


UPDATED : அக் 08, 2026 12:00 AM

ADDED : அக் 07, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:00 AM ADDED : அக் 07, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: மாயகொண்டா ரயில் நிலையத்தில், வந்தே பாரத் ரயில் நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டதால், பயணியர் கடும் கோபம் அடைந்து, போராட்டத்தில் ஈடுட்டனர்.

பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் மதி யம், பெலகாவிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. தாவணகெரேயின் மாயகொண்டா ரயில் நிலையத்தை மாலை 5:30 மணிக்கு அடைந்ததும், ரயில் திடீரென நி றுத்தப்பட்டது.

மாயகொண்டாவில் நிறுத்தம் இல்லாத போதும், ஏன் ரயில் நிறுத்தப்பட்டது என, டிக்கெட் பரிசோதகர்களிடம், பயணியர் கேட்ட போது அவரிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. கோபம் அடைந்த பயணியர் ரயிலில் இருந்து இறங்கி போராட்டம் நடத்தினர்.

பயணியர் சிலர் கூறுகையில், ‘நீண்ட நேரமாக ரயில் இங்கு நிற்கிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. டிக்கெட் பரிசோதகர்களிடம் கேட்டாலும் சரியான பதி ல் இல்லை. ர எதுவும் கூறாமல் தங்கள் பொறுப்பை ரயில்வே ஊழியர்கள் தட்டிகழிப்பது சரிய ல்ல’ என்றனர்.

மாயகொண்டாவில் நிறுத்தப்பட்ட ரயில், நான்கு மணி நேரத்திற்கு பின், இரவு 9:30 மணிக்கு புறப்பட்டது. தாவணகெரேயில் இருந்து சித்ரதுர்கா வழியாக பெங்களூரை இணைக்கும் புதிய ரயில் பாதை பணி, தற்போது நடக்கிறது.

அந்த பணி காரணமாக, வந்தே பாரத் ரயிலை, மாயகொண்டாவில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக, தென்மேற்கு ரயில்வேயின் மைசூரு கோட்ட மேலாளர் கிரிஷ் தர்மராஜ் கல்கொண்டா விளக்கம் அளித்துள்ளார்.

நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகத் தான் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்தாலும், பரவாயில்லை என, வந்தே பாரத் ரயில்களை தேர்வு செய்கிறோம். ஆனால், அந்த ரயிலும் இப்படி இருக்கின்றதே என, பயணியர் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us