தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இலக்கு: கோல்ப் வீராங்கனை பிரணவி உறுதி

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இலக்கு: கோல்ப் வீராங்கனை பிரணவி உறுதி

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இலக்கு: கோல்ப் வீராங்கனை பிரணவி உறுதி


UPDATED : அக் 08, 2026 12:00 AM

ADDED : அக் 07, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 12:00 AM ADDED : அக் 07, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ''ஆசிய விளையாட்டில் நாட்டுக்காக தங்கம் வென்றது பெருமையாக உள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இலக்கு நிர்ணயித்து உள்ளேன்,'' என, கோல்ப் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற பிரணவி அர்ஸ் தெரிவித்தார்.

மைசூரை சேர்ந்தவர் பிரணவி அர்ஸ், 22. ஆசிய விளையாட்டு போட்டியில், கோல்ப் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாறு படைத்துள்ளார்.

பதக்கம் வென்ற பின், மைசூருக்கு வந்த அவருக்கு, பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளில், திறந்த ஜீப்பில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

மைசூரு அரண்மனை கோட்டே ஆஞ்சநேயர் கோவில் முன் நடந்த பாராட்டு விழாவில், பிரணவியை, மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் உடையார் கவுரவித்தார்.

பின், பிரணவி கூறியதாவது:

நாட்டுக்காக தங்கப்பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது. இருப்பினும் இந்த சாதனையை செய்ய நான் பயணித்த பாதை எளிதல்ல. தினமும், 5 - 6 மணி நேரம் பயிற்சி செய்வேன். ஒவ்வொரு நாளும் ஒரு சவாலாக இருந்தது.

என் குடும்பத்தினரின் ஊக்கம் இல்லாமல், இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது தான் எனது அடுத்த இலக்கு. அதற்கான முயற்சியை ஏற்கனவே துவக்கி விட்டேன்.

பொதுவாக கோல்ப் என்பது பணக்காரர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டு என நினைக்கின்றனர். கோல்ப் விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடலாம். ஒருமுறை நீங்கள் இந்த விளையாட்டை விளையாட துவக்கினால், தானாகமே உங்களுக்கு ஊக்கம் வந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us