UPDATED : அக் 08, 2026 12:00 AM
ADDED : அக் 07, 2026 08:54 PM
பெங்களூரு: பெங்களூரில் சமையல் காஸ் சிலிண்டர் வெடி விபத்தில் படுகாயமடைந்த ஆறு பேரில், தாயும், குழந்தையும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பெங்களூரு நாயண்டஹள்ளி வினாயகா லே – அவுட்டில் வசித்தவர்கள் கரிலிங்கப்பா – லட்சுமம்மா. இவர்களின் மகள் சைத்ரா, மகன் பசவனகவுடா, இரட்டை குழந்தைகளான கீதா, கிரிஜா ஆகியோர் வசித்து வருகின்றனர்.
கடந்த 2ம் தேதி காலை 7:00 மணிக்கு அடுப்பை பற்றவைத்தபோது, பயங்கர சத்தத்துடன் சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில், வீட்டில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயில் சிக்கியவர்களை மீட்டு, விக்டோரியா மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இதில், லட்சுமம்மாவுக்கு 70 சதவீதமும், கரியப்பாவுக்கு, 45 சதவீதமும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், லட்சுமம்மா, 43, அ வரின் மகள் கிரிஜா, 3, ஆகியோர் சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தனர். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், கரியப்பாவின் உ டல் நிலை மோசமாக உள்ளதாக த கவல்கள் வெளியாகி உள்ளது.
