/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேல்சபையில் 4 நியமன எம்.எல்.சி., பதவி காங்., மேலிடத்துக்கு சென்றது பெயர் பட்டியல்
/
மேல்சபையில் 4 நியமன எம்.எல்.சி., பதவி காங்., மேலிடத்துக்கு சென்றது பெயர் பட்டியல்
மேல்சபையில் 4 நியமன எம்.எல்.சி., பதவி காங்., மேலிடத்துக்கு சென்றது பெயர் பட்டியல்
மேல்சபையில் 4 நியமன எம்.எல்.சி., பதவி காங்., மேலிடத்துக்கு சென்றது பெயர் பட்டியல்
ADDED : ஆக 26, 2025 03:05 AM
பெங்களூரு: கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு நியமன இடங்களுக்கான வேட்பாளர் பெயர் பட்டியலை இறுதி செய்த முதல்வரும், துணை முதல்வரும், ஒப்புதலுக்காக காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கர்நாடக மேல்சபையில் மொத்தம் 10 நியமன பதவிகள் உள்ளன. இதில், நான்கில் பா.ஜ., மூன்றில் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2024 அக்டோபர் முதல் மூன்று இடங்களும்; 2025 ஜனவரி முதல் ஒரு இடமும் என நான்கு நியமன இடங்கள் காலியாக உள்ளன. எம்.எல்.ஏ.,க்கள் மூலம் தேர்வு செய்யப்படும் இப்பதவிக்கு, பலரும் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்க பாடுபடுகின்றனர்.
முதலில் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில், முதல்வரின் ஆதரவாளர்களான முதல்வரின் முன்னாள் மீடியா ஆலோசகர் ரமேஷ்பாபு, பத்திரிகையாளர் தினேஷ் அமின்மட்டு, தலித் தலைவர் சாகர், மாநில அரசின் வெளிநாட்டு வாழ் இந்திய நிதி துணைத்தலைவர் ஆரத்தி கிருஷ்ணா பெயர் இடம் பெற்றிருந்தது.
இதில், தினேஷ் அமின்மட்டுக்கு சித்தராமையாவும், சாகருக்கு கார்கேவும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். தினேஷ் அமின்மட்டுக்கு பதவி கொடுக்க எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவர் மற்றும் சாகர் பெயர் நீக்கப்பட்டது.
இவர்களுக்கு பதிலாக, முதல்வரின் முன்னாள் மீடியா ஆலோசகர் ரமேஷ் பாபு, மாநில அரசின் வெளிநாட்டு வாழ் இந்திய நிதி துணைத்தலைவர் ஆரத்தி கிருஷ்ணா, மைசூரை சேர்ந்த சிவகுமார், ஹூப்பள்ளி - தார்வாட் காங்கிரஸ் தலைவர் ஜக்கப்பா ஆகியோர் பெயர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இப்பட்டியலை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கட்சி மேலிட ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கட்சி தலைமை ஒப்புதல் அளிக்குமா அல்லது வேறு பெயர் பட்டியல் தயாரிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டால், மேல்சபையில் காங்கிரசின் பலம் 33 ல் இருந்து 37 ஆக உயரும்.