/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை தடுப்பு சுவரில் மோதிய கார் தந்தை - மகன் உட்பட 4 பேர் பலி
/
சாலை தடுப்பு சுவரில் மோதிய கார் தந்தை - மகன் உட்பட 4 பேர் பலி
சாலை தடுப்பு சுவரில் மோதிய கார் தந்தை - மகன் உட்பட 4 பேர் பலி
சாலை தடுப்பு சுவரில் மோதிய கார் தந்தை - மகன் உட்பட 4 பேர் பலி
ADDED : ஜூலை 14, 2025 05:41 AM

ராம்நகர் : பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில், தந்தை - மகன் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு - மைசூரு பத்து வழிச்சாலையில், ராம்நகர் ஜெயபுரா கேட் பகுதியில் நேற்று காலை 3:00 மணிக்கு கார் வேகமாக சென்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி, சாலை தடுப்பு சுவரில் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்தை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டியர் அதிர்ச்சி அடைந்தனர். ராம்நகர் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு சென்ற போலீசார், காரின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேர் உடல்களை மீட்டனர். ஒருவர் உயிருக்கு போராடினார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரும் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் மாண்டியாவின் கே.ஆர்.பேட் தாலுகா மடவினகோடி கிராமத்தின் தம்மண்ணா கவுடா, 56, அவரது மகன் முத்துராஜ், 28, உறவினர்கள் சச்சின், 27, மது, 28 என்பது தெரிந்தது.
நான்கு பேரும் பெங்களூரு கெங்கேரியில் வசித்தனர். கோவில் திருவிழாவுக்காக மடவினகோடி கிராமம் சென்று விட்டு, திரும்ப வரும்போது, கார் ஓட்டிய சச்சின் துாங்கியதால், விபத்து நடந்தது தெரியவந்து உள்ளது.