/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எலக்ட்ரிக் பஸ்களால் ஒரே வாரத்தில் 4 பேர் பலி
/
எலக்ட்ரிக் பஸ்களால் ஒரே வாரத்தில் 4 பேர் பலி
ADDED : ஆக 22, 2025 11:09 PM

பெங்களூரு: பெங்களூரில் பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ் ஓட்டுநர்களின் அலட்சியத்தால், ஒரே வாரத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
பி.எம்.டி.சி., பஸ்களால் விபத்துகள் நடப்பது, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக எலக்ட்ரிக் பஸ்களால் விபத்துகள் அதிகரிப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒரே வாரத்தில் நான்கு பேர், 15 மாதங்களில் 18 பேர் பலியாகியுள்ளனர். இந்த அசம்பாவிதங்களுக்கு, ஓட்டுநர்களின் அதிவேகமும், கவனக்குறைவுமே காரணமாகும்.
பி.எம்.டி.சி.,யால் நியமிக்கப்படும் ஓட்டுநர்களுக்கு, போக்குவரத்து போலீசார் பயிற்சி அளிக்கின்றனர். சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றும்படி, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் பெறப்பட்ட எலக்ட்ரிக் பஸ்களுக்கு, அந்நிறுவனமே ஓட்டுநர்களை நியமித்துள்ளது.
இவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதில்லை. அலட்சியமாகவும், அதிவேகமாக பஸ்களை ஓட்டுவதால், விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தீவிரமாக கருதிய பி.எம்.டி.சி., தற்போது தனியார் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.